Friday 4 October 2019

இதய தேசம்



முட்படுக்கையில் காணும் மலர் கனவுகள்,
உனைப் பிரிந்து வாடும் நாட்கள் யாவும்.
நினைவுகளாலே உன்னை உயிர்ப்பிப்பேன்.
என் உணர்வுகளாலே உனைப் புதுப்பிப்பேன்.
உன்னுள்ளம் கரைய என் காதல் உணர்வாய்!

இளமைக் காட்டை எறிக்க வந்த மோகத்தீ நீ
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்து
பார்த்து இரசிக்கும் வாலிபன் நான்.
முட்டலும் மோதலுமான உறவில்
ஒளிந்து கிடக்கிறது ஆசைப் புறா.

தருவாயே மகரந்த முத்தங்கள் மருந்து,
கண்ட நாள் முதல் காதற் காய்ச்சல்!
நீளும் இரவெல்லாம் மோகப் பாய்ச்சல்!
முதல் பார்வையில் சித்தம் தொலைத்தேன்,
பறக்கும் முத்தத்தில் மொத்தம் தொலைத்தேன்.

செக்கச்சிவந்ந வான்போல் உன்கை மருதாணி
பூக்காடென பரவி கிடக்கிறது அழகு திருமேனி
திக்கற்று தொலையும் நான் சிறு தேனீ.
இதயதேசத்தை வென்று சிரிக்கும் நிலவோ நீ?
இனிமை சேர்த்திடுமே இனிவுன் காதல்ஆட்சியே

உமர்கயாம் கண்ட உண்மைக் காதல்-இவள்
ருமி செதுக்கிய பதுமைச் சிற்பம்.
ஜிப்ரான் வரைந்த பாவை ஓவியம்.
கம்பனுக்கு கிட்டாத கவிதை ப்பொருள்.
காரிகைப் பூவுன்னை எங்ஙனம் கவிபாட?

உன் மேல் வைத்திருந்த கோபக்கற்கள் மீது
காலம் நீரோட்டம், இனி தாபம் தாலாட்டும்.
இமய கன்னி நீ, இதயக் கள்வன் நான்.
இளையச் செல்வி நீ, இதழ்கள் பூத்திட
சனம்கேட்டிடும் நான் சரவணபவ குகன்.

சரவணன்






No comments:

Post a Comment