Wednesday 21 August 2019

விடியற்காதல்


விடியற்காதல்

அதிகாலைச் சூரியன்
போல்
என் காதல் பார்வை
இதழ்கள் சோலையில்
பூத்தது
உன் வெட்கப் பூக்கள்.

காதல் சாலையெங்கும்
வீசும்
உன் கூந்தல் வாசம்.
தனிமைப் பனி நீங்கநீ
பேசு,
இதம் தரும் தேனீர்.

அந்த நம்பிக்கை வானில்
சிறகடித்து
பறப்பது என் பாசப்புறா
மரங்கள் அசைய வீசும்
காற்று
 அவள் ஞாபகத் தீண்டல்!

தூங்காத நெஞ்சில்
நின்ற
நீங்காத நினைவுகள்
யாவும்
பகல்கனவுகள் ஆகுமோ?

ஏங்காத நாட்கள்
இல்லை;
தீராத காதல் சிந்தை,
காலைப்
பிரார்த்தனை யாகுமே!

இது விடியாக் காதலா
அல்ல
விடியும் காதலா
என்று
தெரியாது, எனினும்!

ஓயாது மனம்
அவள்
புன்முறுவல் தேடுவதால்
காதலே
விடியல் என்றானதே!

சரவணன்






1 comment: