Thursday, 24 October 2019

காதல் பெண்



காதல் தேவியிடம்
ஒரு காதல்
வேண்டினேன்.
தேவதை ஒருவள்
என் முன் வந்து
காதல்! என்றாள்.
மலைத்துப் போனேன்.
காதலே காதலியானது
விசித்திரம்!
அவள் பெயரின்
பொருள்
என் வாழ்வின்
அர்த்தம் ஆனது.
கரம் பிடித்தேன்
காதலை!

சரவணன்

No comments:

Post a Comment