Sunday, 13 October 2019

அன்புள்ள காதலி


காத்திருக்கிறது காதல் விண்ணப்பம்.
உன் மூச்சுக்காற்றின் கீழே
நெஞ்சுக் கூட்டில் வாழ ஆசை.
முகத்திரை யிட்டு மனதை மறைக்காதே.
முகமுடி யிட்டு தயக்கம் வளர்க்காதே.
மஞ்சள் வெயில் உன் பார்வையில்
கருநிழல் என நான் விழுந்தேனே
அன்பு மழையில் நனைத்திடத்தானே
காதல் கார்மேகம் காத்திருக்கிறது.
ஆசைச்சூட்டை அணைத்திடத்தானே
ஆகாய வெண்ணிலா காத்திருக்கிறது.
என் உடல் கொண்ட ஆவி அதை
உன் உயிரில் கலந்திட ஆசை.
நாளை நம் வீட்டு முற்றத்தில்
நீ நான் நிலா அழகு.
சித்த வங்கியில் முத்தம் சேகரிப்போம்.
மீத வாழ்க்கையில் முழுமை பெற்றிருப்போம்.
அன்பால் இரு இதயம் இணைய
அண்ட சராசரம் துணை நிற்கும்.
பாசத் தோட்டத்தில் பூக்க
பிள்ளை பூக்கள் அழகு.

சரவணன்


No comments:

Post a Comment