அவள் ஊரிலில்லாப் பொழுதுகள் கூட
உள்ளம் பொருமையிழந்து நின்றனவே
அவள் மனதிலில்லாமல் போன சோகம்
எல்லாம் எங்ஙனம் சொல்லித் தீர்ப்பேன்.
தூக்கம் விற்று வாங்கிய கனவில்
ஊக்கம் ஊட்டும் உதட்டின் சிரிப்பில்
ஏக்கம் ஏற்றும் மோகப் பார்வையில்
ஆக்கம் அற்று அலையும் மனமே!
காணுமிடமெல்லாம் உன் பிம்பம்
காற்றெங்கும் நின் கூந்தல் வாசம்
நிலமெல்லாம் உன் பாதச்சுவடுகள்
நினைவுகள் முழுவதும் நின் புன்னகை.
கருங்கூந்தல் நீர்வீழ்ச்சி, கூர்வாள் சிந்தை.
மின்னல் பேச்சு, மின்சாரத் தீண்டல்
தென்றல் சுவாசம், பிள்ளை பாசம்
கடும்பனி கோபம், நேசம் நிலாசுகம்.
நிலாமகள் போனபின்னே நட்சத்திரங்கள் தேவையென்ன?
இரவுக் காடுகள் வெறுமையான தன்றோ!
உலா போக என் வாழ்க்கை தோழி எங்கே?
மாலை வேளைகளில் தனிமைத் தீ வாட்டுகிறதே !
எனை மீ்ண்டும் உயிர்கொள்ள வேண்டும் நீயோ
என்வானவில் வண்ணம் கண்டு வருவாயோ
உனைப் பிரிந்து தினம் தவிக்கும் நானோ
தன்நிலவைத் தொலைத்து வாடும் வானம்.
சரவணன்
உள்ளம் பொருமையிழந்து நின்றனவே
அவள் மனதிலில்லாமல் போன சோகம்
எல்லாம் எங்ஙனம் சொல்லித் தீர்ப்பேன்.
தூக்கம் விற்று வாங்கிய கனவில்
ஊக்கம் ஊட்டும் உதட்டின் சிரிப்பில்
ஏக்கம் ஏற்றும் மோகப் பார்வையில்
ஆக்கம் அற்று அலையும் மனமே!
காணுமிடமெல்லாம் உன் பிம்பம்
காற்றெங்கும் நின் கூந்தல் வாசம்
நிலமெல்லாம் உன் பாதச்சுவடுகள்
நினைவுகள் முழுவதும் நின் புன்னகை.
கருங்கூந்தல் நீர்வீழ்ச்சி, கூர்வாள் சிந்தை.
மின்னல் பேச்சு, மின்சாரத் தீண்டல்
தென்றல் சுவாசம், பிள்ளை பாசம்
கடும்பனி கோபம், நேசம் நிலாசுகம்.
நிலாமகள் போனபின்னே நட்சத்திரங்கள் தேவையென்ன?
இரவுக் காடுகள் வெறுமையான தன்றோ!
உலா போக என் வாழ்க்கை தோழி எங்கே?
மாலை வேளைகளில் தனிமைத் தீ வாட்டுகிறதே !
எனை மீ்ண்டும் உயிர்கொள்ள வேண்டும் நீயோ
என்வானவில் வண்ணம் கண்டு வருவாயோ
உனைப் பிரிந்து தினம் தவிக்கும் நானோ
தன்நிலவைத் தொலைத்து வாடும் வானம்.
சரவணன்